வகுத்தல் கணக்கு தெரியாமல் முழித்த தலைமை ஆசிரியை - விளாசிய ஆட்சியர்!

Viral Video Madhya Pradesh
By Sumathi Aug 30, 2022 07:30 PM GMT
Report

வகுத்தல் கணக்கை சரியாகச் செய்ய தெரியாமல் போன தலைமை ஆசிரியைக்கு வேலை பறிபோனது.

கற்றல் திறன் 

மத்திய பிரதேசம், பாலகாட் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கிரீஷ் குமார். கொரேனாாவால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அடிக்கடி பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.

வகுத்தல் கணக்கு தெரியாமல் முழித்த தலைமை ஆசிரியை - விளாசிய ஆட்சியர்! | Headmistress Fails To Solve Math Division Mp

அந்த வகையில் கலெக்டர் கிரீஷ் குமார் தனது மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்யும் வகையில் சில கேள்விகள் கேட்டார். தொடர்ந்து, போர்ட்டில் 444யை 4லால் வகுக்கும்படி மாணவர்களிடம் கூறினார்.

வகுத்தல் தெரியாத ஆசிரியை

அப்போது மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. இதையடுத்து கலெக்டர், அந்த வகுப்பின் ஆசிரியையும், தலைமை ஆசிரியையுமான சேனா துருவ் என்பவரிடம் 444யை 4ல் வகுக்கும் வகையில் மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு சொல்லிக்கொடுக்கும்படி கூறினார்.

ஆனால் தவறாக செய்தார்.இதைப் பார்த்து அதிர்ந்த ஆட்சியர் கிரிஷ் குமார், இந்த சிறிய கணக்கைக் கூட உங்களால் போட முடியவில்லை என்றால், எப்படி மாணவர்களுக்குக் கற்பிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 கலெக்டர் ஆய்வு 

அதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து சோனாவை நீக்கியதோடு, அவருக்கு வர வேண்டிய ஊதிய உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளார். இதேபோல் மத்திய பிரதேசத்தில் உள்ள மலஞ்காண்ட் சிஎம் ரைஸ் பள்ளிக்கும் கலெக்டர் ஆய்வு சென்றார்.

அப்போது 6024யை 5 ஆல் வகுக்கும்படி மாணவர்களிடம் அவர் கூறினார். மாணவர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து மாணவர்களுக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும்படி ஆசிரியர் தினேஷ்வரி ராகன்டாலியிடம் கூறினார். வகுத்தல் கணக்கை தவறாக செய்தார். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.