ஏசி பெட்டியில் ஓசி டிராவல்; TTE-யிடம் ஆசிரியை அட்ராசிட்டி - கடைசியில் ட்விஸ்ட்!
டிக்கெட் பரிசோதகருடன் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் இல்லை
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் ஒருவர் TTE -யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரயிலை விட்டு இறங்க மறுக்கும் காட்சிகள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதில், TTE அந்த பெண்ணிடம், “உங்களுடைய டிக்கெட்டை காட்டுங்கள். இல்லையெனில் வெளியேறுங்கள்”, என்று சொல்வதை பார்க்க முடிகிறது.
பெண் வாக்குவாதம்
அந்தப் பெண் பீகாரில் உள்ள அரசு பள்ளியில் ஒரு ஆசிரியை என்பதை TTE உறுதி செய்கிறார். டிக்கெட் இல்லாமல் பயணித்தது மட்டுமன்றி,
அந்தப் பெண் தொடர்ந்து TT -யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் தன்னிடம் அத்துமீறுவதாகவும் கூறுகிறார். இவரை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.