பழங்குடியின பெண்கள் பொட்டு, தாலி அணிய கூடாது- ஆசிரியர் சர்ச்சை பேச்சு!
பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது.
ராஜஸ்தானில் பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேனகா தாமோர் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா என்ற அமைப்பின் நிறுவனரான செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த 19-ந்தேதி பன்ஸ்வாரா பகுதியில் பரிவார் சன்ஸ்தா பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேனகா தாமோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் கலந்துகொண்டனர்.
பழங்குடியின பெண்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய மேனகா தாமோர், "பண்டிதர்கள் கூறுவதை பழங்குடியின பெண்கள் பின்பற்றக் கூடாது என்று தெரிவித்தார் . மேலும் பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது என்று தெரிவித்த அவர் ,'' பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
விரதங்களை கடைப்பிடிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து இருந்தார். அவரது பேச்சால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர் . இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ராஜஸ்தான் அரசின் நடத்தை விதிகளை மீறியகாகவும்,கல்வித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி ஆசிரியை மேனகா தாமோரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.