ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு தண்ணீர் தரவில்லை..காவிரி விவகாரம்...பிரதமர் காட்டம்!!

Tamil nadu BJP Narendra Modi Karnataka Rajasthan
By Karthick Oct 03, 2023 05:12 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, காவிரி விவகாரத்தை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

ராஜஸ்தானில் நலத்திட்டங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிறகு, தொண்டர்களுடன் பேரணி சென்றார். பின்னர் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், போன்ற தொண்டர்களிடத்தில் உரையாற்றினார். அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதீத கவனத்தை மத்திய அரசு அளித்து வருவதாக கூறி, அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

modi-slams-indirectly-kaveri-issue

மாநிலத்தில் விரைவு சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து என அனைத்திலும் நவீன கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தை அழித்துவிட்டதாகக் பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, நாட்டில் நடைபெறும் குற்றம்சம்பவங்களின் குற்றப் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் தான் முதலிடத்தில் இருப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.

தண்ணீர் தருவதில்லை

மேலும், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரிப்பதைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்த அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு விலகுவதற்கான கவுன்டவுன் துவங்கி விட்டதை அம்மாநிலத்தின் முதல்வரான அசோக் கெலாட்டே அறிவார் என்றார்.

modi-slams-indirectly-kaveri-issue

உரிய தகுதியானவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என கூட்டத்தில் உறுதியளித்த பிரதமர் மோடி, தற்போது மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக தகராறுகள் நடப்பதாகவும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு தண்ணீர் தருவதில்லை எனவும் மறைமுகமாக தமிழ்நாடு - கர்நாடக காவிரி விவகாரத்தை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தார்.