இதுதான் தாம்பத்யம்.. மாணவிகளிடம் ஆபாச படம் காட்டி பாடம் எடுத்த ஆசிரியர்!
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை சரமாரியாக பெற்றோர்கள் தாக்கியுள்ளனர்.
பள்ளி மாணவிகள்
கர்நாடகா, கோலார் தாலுகாவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் வழக்கம்போல் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.
அப்போது, முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தாம்பத்தியம் குறித்தும் விளக்கிப் பேசி இருக்கிறார். தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு அது தொடர்பான ஆபாச படங்களையும் காட்டி பேசியுள்ளார்.
ஆபாச பாடம்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் பிரகாசசை பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.
அதனையடுத்து, இதுகுறித்து வட்டார கல்வித் துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாணவ மாணவியரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வகுப்பறையில் ஆசிரியர் பிரகாஷின் செயல் குறித்து தெரிய வந்ததை அடுத்து அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.