சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை; ஆசிரியரால் நேர்ந்த கொடூரம் - கதறிய பெற்றோர்!
ஓய்வு பெற்ற ஆசிரியர் சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
திருவனந்தபுரம், போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜப்பார்(60). இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்று தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இவரிடம் 11 வயது மாணவன் படித்து வந்தான். அவனை ஆசிரியர் மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதற்கிடையில், அந்த சிறுவனின் தம்பியையும் இவரிடம் படிக்க அனுப்ப பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.
ஆசிரியர் கொடுமை
அதற்கு அந்த மாணவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் காரணம் கேட்டதில், நடந்த கொடுமையை கூறியுள்ளார். உடனே, பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, அப்துல் ஜப்பாருக்கு 56 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பாலியல் கொடுமை செய்து வந்தவருக்கு எந்த கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.