16 வயது மாணவனிடம் அத்துமீறிய 40 வயது ஆசிரியை - ஓராண்டாக நடந்த கொடுமை

Sexual harassment Mumbai
By Sumathi Jul 03, 2025 08:13 AM GMT
Report

16 வயது மாணவனை, 40 வயது ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா, மும்பையில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் 16 வயது மாணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்து கேட்டுள்ளனர்.

16 வயது மாணவனிடம் அத்துமீறிய 40 வயது ஆசிரியை - ஓராண்டாக நடந்த கொடுமை | Teacher Sexual Assault On 16 Year Boy Mumbai

அப்போது ஆசிரியை ஒருவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் 40 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2023இல் பள்ளி ஆண்டு விழா நடந்த போது பாதிக்கப்பட்ட மாணவனை, ஆசிரியை சந்தித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு, பாலியல் உறவு குறித்து தனது உணர்வுகளை மாணவனிடம் அந்த ஆசிரியை வெளிப்படுத்தியுள்ளார்.

பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில்.. நர்சிங் மாணவியை கழுத்தறுத்த காதலன்!

பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில்.. நர்சிங் மாணவியை கழுத்தறுத்த காதலன்!

ஆசிரியை கைது

இதை கேட்டு தயங்கிய மாணவன், ஆசிரியரைத் தவிர்க்க தொடங்கினார். ஆனால், உறவை ஏற்றுக்கொள்ளும்படி, மாணவனின் பெண் தோழியிடம் ஆசிரியர் உதவி கேட்டுள்ளார். அதன்படி தோழி அந்த மாணவனை சம்மதிக்க வைத்துள்ளார்.

16 வயது மாணவனிடம் அத்துமீறிய 40 வயது ஆசிரியை - ஓராண்டாக நடந்த கொடுமை | Teacher Sexual Assault On 16 Year Boy Mumbai

இதனையடுத்து மாணவனை விலை உயர்ந்த ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்கு அதிகளவில் பதற்றம் இருந்ததால், பதற்ற எதிர்ப்பு மாத்திரைகளை கொடுத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பின் சிறுவன் பள்ளியில் இருந்து வெளியேறியதினால் ஆசிரியர் அவனை விட்டுவிடுவார் என குடும்பத்தினர் எண்ணியுள்ளனர்.

இருப்பினும், சமீபத்தில் அந்த ஆசிரியர், வீட்டு ஊழியர்கள் மூலம் மாணவரை மீண்டும் தொடர்பு கொண்டு சந்திக்கும்படி கேட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, மாணவரின் பெண் தோழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.