பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில்.. நர்சிங் மாணவியை கழுத்தறுத்த காதலன்!
நர்சிங் மாணவியை அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்ட மருத்துவமனையில் சந்தியா சவுத்ரி என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார். சம்பவத்தன்றுமாணவி அவசர சிகிச்சை பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மருத்துவமனைக்குள் கத்தியுடன் இளைஞர் ஒருவர் நுழைந்து, நர்சிங் மாணவியை ஓரமாக அழைத்துச் சென்று தகராறு செய்துள்ளார். அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர் மருத்துவமனைக்குள் வைத்தே மாணவியைத் தாக்கியுள்ளார்.
அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த போதும் யாரும் அவரை தடுக்கவில்லை. இதனால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நர்சிங் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கிடையில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்று உயிர்பிழைத்துவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.