1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை -பள்ளியில் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

Sexual harassment Puducherry School Incident Teachers
By Vidhya Senthil Feb 15, 2025 05:40 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

    1-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1-ம் வகுப்பு சிறுமி

புதுச்சேரியில் தவளக்குப்பத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலிருந்துள்ளார்.

1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை -பள்ளியில் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் பின்னணி! | Teacher Harasses 1St Grade Student In Puducherry

அப்போது சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிசோதித்ததில் அவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரித்துள்ளனர்.

ஆசனவாயில் மாணவனுக்கு கடும் நோய்த்தொற்று - தமிழ் ஆசிரியர் செய்த கொடூரம்!

ஆசனவாயில் மாணவனுக்கு கடும் நோய்த்தொற்று - தமிழ் ஆசிரியர் செய்த கொடூரம்!

ஆனால் அவர்கள் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி பள்ளியைச் சூறையாடினர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானம் செய்தனர்.

1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை -பள்ளியில் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் பின்னணி! | Teacher Harasses 1St Grade Student In Puducherry

மேலும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.