பாலியல் வழக்கில் விடுதலையான நபர்..மனைவி மற்றும் மகளுக்கு நேர்ந்த கொடூரம் - கணவர் வெறிச்செயல்!

India Assam Crime Murder
By Vidhya Senthil Feb 13, 2025 07:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  மனைவி மற்றும் மகளைக் கொலை செய்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம்

அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ஜுலி டிகா. இவருக்குத் திருமணமாகி முதல் கணவர் பிரிந்து சென்ற நிலையில் 2 வதாக லோகித் தகுரியா என்வரை திருமணம் செய்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார்.

பாலியல் வழக்கில் விடுதலையான நபர்..மனைவி மற்றும் மகளுக்கு நேர்ந்த கொடூரம் - கணவர் வெறிச்செயல்! | Assam Man Coming Out Of Jail Kills Wife Daughter

இந்த நிலையில் லோகித் தகுரியா,ஜுலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ஜுலி தனது கணவர் லோகித் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலியை திட்டியதால் ஆத்திரம் - காதலி கண்முன்னே தாயை கொன்ற காதலன்

காதலியை திட்டியதால் ஆத்திரம் - காதலி கண்முன்னே தாயை கொன்ற காதலன்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லோகித் தகுரியா சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளார். இதனால் தனது மனைவியிடம் லோகித் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று, அதிகாலை 2 மணிக்கு மீண்டும் ஜுலிக்கும், லோகித்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லோகித் ஜுலியையும் அவரது மகளையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு லோகித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாலியல் வழக்கில் விடுதலையான நபர்..மனைவி மற்றும் மகளுக்கு நேர்ந்த கொடூரம் - கணவர் வெறிச்செயல்! | Assam Man Coming Out Of Jail Kills Wife Daughter

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.