மாணவர் ஆசையாக கொடுத்த சாக்லெட்..வாங்கிய ஆசிரியர் பணி நீக்கம் - நடந்தது என்ன?
மாணவியிடம் சாக்லேட்டை பரிசாக பெற்ற பள்ளி ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாக்லெட்..
பள்ளி பருவத்தில் நமக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு பாசத்தின் அடையாளமாக பரிசுகளை வழங்குவதுண்டு. அதிலும் ஆசிரியர் தினம் வந்தால் சாக்லெட் கொண்டு சென்று பிடித்த ஆசிரியர்களுக்கு கொடுப்பது எல்லம் மிகவும் வழக்கம்.
அந்த வகையில், அண்டை நாடான சீனா, சோங்கிங்கில் இயங்கி வரும் சான்சியா மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினத்தன்று இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, மாணவர் ஒருவர் பரிசாக ரூ.60 மதிப்புள்ள சாக்லேட் வாங்கி ஆசிரியை ஒருவருக்கு கொடுத்ததால் அவருடைய வேலையை இழக்க நேரிட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில் பதிவாகியிருப்பது என்னவென்றால்,
மாணவி ஒருவர், பள்ளியின் முதல்வர் வாங்கிடம் சாக்லேட் பாக்ஸ் கொடுப்பதைக் கொடுக்கிறார். அதன் பிறகு வாங் மாணவரைக் கட்டிப்பிடித்தார். அதன் பிறகு, வாங் சாக்லேட் பாக்ஸைத் திறந்து வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு மிட்டாய்களை விநியோகித்தார்.
பணி நீக்கம்
இதன் காரணமாக ஒரு மாணவியிடமிருந்து பரிசு பெற்றதற்காக வாங் நீக்கப்படுவதாக நர்சரி பள்ளி அதிகாரிகள் விளக்கினர். நாட்டின் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை வாங் மீறியதாக பள்ளி அதிகாரிகள் கூறினர்.
பள்ளி நிர்வாகத்தின் கூற்றுப்படி, மாணவர்கள் அல்லது பெற்றோரிடமிருந்து பரிசுகள் அல்லது பணத்தைப் பெறுவது சட்டப்படி குற்றமாகும். இதனையடுத்து, வாங் ஜியுலாங்போ நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
பரிசுகளை ஏற்றுக்கொண்டது கல்வி அமைப்பின் உத்தரவை மீறிய செயல் என்று பள்ளி நிர்வாகம் வாதிட்டது. ஆனால் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. வாங்கின் பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாக அந்த மாணவி வாங்குக்கு சாக்லேட் கொடுத்ததாகவும், வாங் அதை ஏற்றுக்கொண்டதை சட்டத்தை மீறியதாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், வாங்க் பணி நீக்கம் செய்யபட்டதற்கு பள்ளி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.