மாணவியுடன் காதல்: திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை!

Rajasthan
By Sumathi Nov 08, 2022 10:04 AM GMT
Report

மாணவியை திருமணம் செய்ய ஆசிரையை ஆணாய் மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தன்பாலின காதல்

ராஜஸ்தான், அரசு பள்ளியில் கபடி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வேலை செய்து வருபவர் மீரா. இவரிடம் கல்பனா என்பவர் பல ஆண்டுகளாக கபடி பயின்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

மாணவியுடன் காதல்: திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை! | Teacher Gender Operation To Marry His Student

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மீரா, கல்பனாவிடம் தனது காதலை கூறியுள்ளார். கல்பனாவும் உடனே சம்மதித்துள்ளார். ஆனால் இருவரும் பெண்கள் என்பதால் அவர்கள் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

 பாலின அறுவை சிகிச்சை

இதனால், மீரா பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆணாக மாறி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். அதற்கு பிறகு மீரா தனது பெயரை ஆரவ் குந்தல் என மாற்றியுள்ளார்.

இதுகுறித்து ஆரவ் தெரிவிக்கையில், தான் சிறு வயதில் இருந்தே தன்னை ஓர் ஆணாகவே உணர்ந்தேன். அதனால் இந்த அறுவைச் சிகிச்சை செய்யும் முடிவு இயல்பானதாகவே அமைந்தது.

2019 ஆம் ஆண்டு, தொடர் அறுவைச் சிகிச்சையை தொடங்கி, 2021 ஆம் ஆண்டு கடைசி அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.