திரையில் தோன்றிய பூனை.. அதுக்கு இப்படியா செய்வீங்க? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

China
By Sumathi Aug 24, 2022 06:44 AM GMT
Report

ஆன்லைன் வகுப்பில் திரையில் பூனை தோன்றியதால் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு

சீனா, குவாங்செள என்ற நகரைச் சேர்ந்தவர் லுவோ. இவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது ஆனலைன் வகுப்பு எடுத்து கொண்ண்டிருந்தார். அவருடைய திரையில் வளர்ப்பு பூனை தோன்றியதால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

திரையில் தோன்றிய பூனை.. அதுக்கு இப்படியா செய்வீங்க? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Teacher Fired Cats Appearance During Online Class

மேலும், முந்தைய வகுப்புக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காகவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்ற கல்விசார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று லூவை பணியிலிருந்து நீக்கியிக்கிறது.

பூனையால் பணிநீக்கம் 

இந்நிலையில், அந்த ஓவிய ஆசிரியர், அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லியாவோ யாஜிங்,

திரையில் தோன்றிய பூனை.. அதுக்கு இப்படியா செய்வீங்க? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Teacher Fired Cats Appearance During Online Class

"முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதைப் போன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது".

இழப்பீடு

மேலும் நிறுவனங்களின் விதிகள் நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஓவிய ஆசிரியரனா லுவோவிற்கு அந்நிறுவனம் 40,000 யுவான்,

அதாவது இந்திய மதிப்பில் 4.7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.