விமானத்தில் திருமணம்... ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம்...

Madurai Marriage function at flight
By Petchi Avudaiappan May 24, 2021 11:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரையின் விமானத்தில் திருமணம் நடந்தேறிய சம்பவத்தில் விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஒருவாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் நடைபெறவிருந்த திருமணங்கள் அனைத்தும் நேற்று அவசர அவசரமாக நடைபெற்று முடிந்தன.

விமானத்தில் திருமணம்... ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம்... | Getting Married On The Plane Issue

இதில் மதுரை நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த மணமக்கள் ராகேஷ் மற்றும் தீக்ஷனா இருவரும் மதுரையில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் உறவினர்கள் முன்னிலையில் இந்து சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தனர். 

இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 உறவினர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,அதற்கும் மேலான எண்ணிக்கையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

https://www.youtube.com/watch?v=DPckr1YeVpQ&ab_channel=IBCTamil

இதனால் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதேசமயம் விசாரணை முடியும் வரை திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.