பூட்டிய வீட்டில் 5 சடலங்கள்; ஆசிரிய தம்பதி எடுத்த விபரீத முடிவு - பரபர பின்னணி!
ஆசிரிய தம்பதி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை
விருதுநகர், திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம். அங்கு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். அவரும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. உடனே, அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குடும்பமே தற்கொலை
உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், கணவன் மனைவி தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். குழந்தைகள் மூவரும் விஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.
இதனையடுத்து உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.