துக்கத்திலும் ஆசிரியர்களுக்கு நன்றி சொன்ன பள்ளி மாணவன் : நெகிழ்ச்சி சம்பவம்
தனது பாட்டி இறந்த துக்கத்திலும் பள்ளிக்கு சீருடையில் வந்து ஆசிரியர்களுக்கு நன்றி சொன்ன மாணவன் நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் தினவிழா
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று பள்ளி மற்றும் கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில்இ திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் கம் ரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவன் முகில்.
துக்கத்திலும் நன்றி சொன்ன மாணவன்
இவரது பாட்டி நேற்று இறந்துள்ளார். இதையடுத்து மாணவனின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஆசிரியர் தினம் என்பதை அறிந்த மாணவன் முகில் தன் பாட்டி இறந்த துக்கத்திலும் தன் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க தனது சீருடைகளை அணிந்து கொண்டு ஆசிரியர் தினவிழா நிகழ்ச்சிக்கு வந்தான்.
ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர் ஒருவர் வரவேற்புரை நிகழ்த்தி கொண்டிருந்த போது ஆசிரியரிடம் சார் எனக்கு ஒரு நிமிடம் மைக் தாருங்கள் எனக் கேட்டு வாங்கிய முகில் மைக்கில் என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் எனக் கூறி விட்டு ஆசிரியர்கள் அனுமதி பெற்று வீட்டுக்கு சென்று பாட்டியின் உடல் உள்ள இடத்திற்கு சென்றான்.
பள்ளியின், ஆசிரியர்களின் மீதான அன்பும் மரியாதையும் இன்றும் நின்று நிலவுகிறது
என்பதை இம் மாணவன் நிருபித்து உள்ளார்.