வீட்டிற்கு வா..மாணவியை அழைத்த ஆசிரியர் - 6 இளைஞர்கள் செய்த கொடூர செயல்!
பள்ளி மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த ஆசிரியரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
பள்ளி மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 42 வயதாகும் தனக்கரசு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தனக்கரசு மது போதையில் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்.. என்ன செய்கிறாய்.. வீட்டுக்கு வா.. எனக் கடந்த மாதம் செல்போனில் அலைத்தாக தெரிகிறது.
இதற்கு அந்த மாணவி சார் நான் டி சி வாங்க போறேன் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் வீட்டுக்கு வா என ஆசிரியர் அலைத்திருக்கிறார். அதற்கு மாணவி நான் ஏன் வரவேண்டுமெனப் பேசுவதாக ஆடியோ பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி பேசிய ஆடியோவை சக மாணவர்களிடம் கூறி காண்பித்துள்ளார். இந்த செல்போன் உரையாடலை வைத்து இளைஞர்கள் சதீஷ்குமார் , கோகுல் மனோஜ் , செல்வராஜ்,சேதுராமன் , சந்துரு ஆகிய ஆறு இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆசிரியர்
இதனையடுத்து ஆசிரியர் தனக்கரசுவை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டி போட வைத்துள்ளனர் . மேலும் அந்த மாணவியின் செல்போன் நம்பர் உனக்கு எப்படிக் கிடைத்தது. திருமணம் ஆகி உனக்குக் குழந்தைகள் இல்லையா, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா, நாங்களும் தான் குடிக்கிறோம்.
ஆனால் இப்படி செய்ய மாட்டோம் உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என கேட்டு இளைஞர்கள் ஆசிரியரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். பின்னர் அதனை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் வைரலானது .
இந்த சம்பவம், குறித்து ஆசிரியர் தனகராசுவை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆசிரியரைத் தாக்கி தலைமறைவாக உள்ள மாணவர்களையும் காவல்துறை தேடிப் பிடித்து கைது செய்து வருகிறார்கள்.