பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - பெற்றோரை தாக்கிய இன்ஸ்பெக்டர்!

Chennai Sexual harassment Crime
By Sumathi Sep 11, 2024 05:11 AM GMT
Report

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை போலீஸார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அரசு பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்ற இளைஞர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில்,

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - பெற்றோரை தாக்கிய இன்ஸ்பெக்டர்! | Police Assaulted Parents File Sexual Complaint

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சதீஷ் மீது புகார் அளிக்க அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த பெண்காவல் ஆய்வாளர் ராஜி மற்றும் சில ஆண் போலீஸார்

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

 நீதிமன்றம் அதிரடி

புகார் கொடுக்க வந்த சிறுமியின் பெற்றோரிடம் புகாரில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞர் சதீஷின் பெயரை நீக்க வற்புறுத்தி அடித்து தாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.

chennai high court

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்ய பிரகாசம் ஆஜராகி, ஒரு நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முறையீடு செய்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், அந்த நாளிதழ் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, ஒப்புதலுக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.