மாணவனை படுமோசமாக தாக்கிய ஆசிரியர் - சிசிடிவியால் வெளியான அதிர்ச்சி!

Crime Tirupathur
By Sumathi Nov 17, 2025 11:45 AM GMT
Report

மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர் செயல்  

திருப்பத்தூர், வாணியம்பாடி நகர பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். எனவே, அங்கு இவர்கள் மதம் சார்ந்து அறிவு மற்றும் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில்

vaaniyambadi

பல மதரசா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் இஸ்லாமிய மதம் சார்ந்த உபதேசங்கள் மற்றும் குரான் வசனங்கள் உள்ளிட்டவற்றை கற்று தருகின்றனர்.

அதிர்ச்சி காட்சிகள் 

இதற்காக வாணியம்பாடி பஷிராபாத் மசுதியின் மேல் தளத்தில் செயல்பட்டு வரும் மதரசா பள்ளிகள் 60 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

இதில் நான்கு ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று தற்போது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதில் ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கடுமையான கூட்டங்களுக்கு பின் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கபட்டதாக சம்மந்தப்பட்ட மதரசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.