மாணவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை - ஆத்திரத்திற்கு அளவில்லையா..!
5ஆம் வகுப்பு மாணவியை, ஆசிரியை மாடியில் இருந்து கீழே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர தாக்குதல்
டெல்லி, நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியையாக இருப்பவர் கீதா தேஷ்வால். இவர் வழக்கம்போல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த வகுப்பில் படிக்கும் மாணவி வந்தனா வகுப்பை கவனிக்காத்தால் ஆசிரியை ஆத்திரமடைந்துள்ளார். அதனால், அந்த மாணவியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். மேலும் அவரது தலைமுடியையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
ஆசிரியை ஆத்திரம்
தொடர்ந்து, வகுப்பறையின் முதல் மாடி ஜன்னலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். உடனே கீழே விழுந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனையடுத்து புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவியின் சிகிச்சை செலவை ஏற்பதாக டெல்லி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. தேசுய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.