மூடப்படாத கதவு.. லிஃப்ட் இடையில் சிக்கிய ஆசிரியை உயிரிழந்த பரிதாபம்!

Accident Mumbai Death
By Sumathi Sep 18, 2022 11:52 AM GMT
Report

பள்ளி லிஃப்டில் சிக்கிய ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியை

மும்பை, மலாடு பகுதி சிஞ்சோலி பண்டர் எனும் இடத்தில் புனித மேரி ஆங்கில உயிர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், ஜெனல் பெர்னாண்டஸ்(26) என்பவர் பணியாற்றி வந்தார்.

மூடப்படாத கதவு.. லிஃப்ட் இடையில் சிக்கிய ஆசிரியை உயிரிழந்த பரிதாபம்! | A Teacher Died After Getting Stuck In A Lift

அங்கு அவர் ஆறாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியில் உள்ள ஆசிரியர்கள் அறைக்கு அவர் லிஃப்டில் வர முயன்றுள்ளார். அப்போது அவர் லிஃப்டுக்குள் நுழைய முயன்ற போது அதன் கதவுகள் தானாக மூடிக் கொண்டுள்ளன.

லிஃப்டில் சிக்கி பலி

அதோடு லிஃப்ட் மேல் நோக்கி நகர்ந்துள்ளது. லிஃப்டின் கதவுகளுக்கு இடையில் சிக்கிய அவரை அதிலிருந்து மீட்க பள்ளியின் ஊழியர்கள் சிரமப்பட்டு வெளியில் இழுத்து மீட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இந்த வழக்கை விபத்தாக பதிவு செய்துள்ளனர்.

அதோடு இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதேனும் இந்த வழக்கில் மறைக்கப்பட்டிருந்தால் அதனை அடையாளம்கண்டு தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.