அறுந்து விழுந்த லிஃப்ட் - 8 பேர் பலியான சோகம்..எப்படி நடந்தது விபத்து?
கட்டுமான பணியின் போது லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமான பணி
குஜராத், அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 எனும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் வழக்கம் போல பணிகள் நடைபெற்றுவந்தது. அப்பொழுது பணியாளர்கள் பயணிக்கும் லிப்ட் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லிஃப்ட் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கட்டடஉரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,
லிஃப்ட் விபத்து
விபத்தில் உயிரிழந்த 8 கூலித் தொழிலாளர்களும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இந்த விபத்தானது காலை 7.30 மணியளவிலேயே நடந்துள்ளது ஆனால், போலீஸாருக்கு 11 மணி அளவில்தான் தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாமதமாக தெரிவிக்க காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.