நீங்க ஒரு Scientist நிரூபிச்சிட்டீங்க..தேநீர் விற்பனையாளர் செய்த செயல் - வைரல் வீடியோ!
ரயிலில் உள்ள பயணிக்கு ஜன்னல் வழியாகத் தேநீர் விற்பனையாளர், டீ கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்
நாம் ரயிலில் பயணிக்கும் போது சில வினோத சம்பவங்கள் மற்றும் விசித்திர நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கும். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அப்படி நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குஜராத் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தேநீர் விற்பனையாளர் ஒருவரிடம் பயணி தேநீர் கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே வர முடியவில்லை.
சற்று தேநீர் விற்பனையாளர் ஒரு பேப்பர் கப்பை ஜன்னலில் உள்ள சிறிய துளைகளின் வழியாக மடக்கி அனுப்புகிறார்.பின்னர், பயணி அந்த பேப்பர் கப்பை சரியாக்க, ரயில் ஜன்னலில் இருக்கும் சிறிய ஓட்டையின் வழியாக டீ ஊற்றியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.