கழிவறை தண்ணீரை பயன்படுத்தி மருத்துவர்களுக்கு உணவு ? வெளியான அதிர்ச்சி வீடியோ!
கழிவறை தண்ணீரை பயன்படுத்தி மருத்துவர்களுக்கு உணவு சமைப்பட்டதாக கூறும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பிப்ரவரி 6 ஆம் தேதி தேசிய அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் மாநாட்டில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
மருத்துவர்களுக்குக் கழிவறை தண்ணீரைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவில், கழிவறை குழாயிலிருந்து வரும் தண்ணீரைச் சமையல் செய்யும் ஊழியர்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
சர்ச்சை
இதற்கு மருத்துவர்கள்கள்தரப்பில் கடும் கண்டங்கள் எழுந்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கல்லூரி டீன் நவ்நீத் சக்சேனா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தண்ணீர் பாத்திரங்களைக் கழுவ மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், சமையலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.