வெறும் வெந்நீர் தான்; ஆனால், ஒரு டீ விலை 340 ரூபாயா? ஏர்போர்ட்டில் ப.சிதம்பரம் கொந்தளிப்பு!

West Bengal P. Chidambaram
By Sumathi Sep 16, 2024 09:00 AM GMT
Report

விமான நிலையத்தில் ஒரு தேநீரின் விலை 340 ரூபாயா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில், கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள

வெறும் வெந்நீர் தான்; ஆனால், ஒரு டீ விலை 340 ரூபாயா? ஏர்போர்ட்டில் ப.சிதம்பரம் கொந்தளிப்பு! | Tea Rs 340 Airport Ex Minister P Chidambaram

‘The Coffee Bean and Tea Leaf’ உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் ரூ.80-க்கு விற்கப்படுவது பற்றி ட்விட்டரில் பதிவிட்டேன்.

பக்கோடா, பஜ்ஜி போடுவதுலாம் வேலைவாய்ப்பு இல்ல - ப.சிதம்பரம்

பக்கோடா, பஜ்ஜி போடுவதுலாம் வேலைவாய்ப்பு இல்ல - ப.சிதம்பரம்

வைரல் பதிவு

அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கொல்கத்தா விமான நிலையம்,

“நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை முரண்பாட்டை ஆராய்ந்து, விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க நிறுவனமான The Coffee Bean and Tea Leaf-ல், தேசிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் கலவையாக இது செயல்பட்டு வருவதாகவும், சுவை மற்றும் தரநிலைகளை பொறுத்து விலை மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.