மனைவி டார்ச்சர்; ஆண்களை பற்றி யோசிங்க - TCS ஊழியர் தற்கொலை!

Uttar Pradesh Relationship Death
By Sumathi Mar 01, 2025 04:15 AM GMT
Report

டிசிஎஸ் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு தொடர்பு?

உத்தரப்பிரதேசம், ஆக்ராவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஊழியர் மானவ் சர்மா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மானவ் சர்மா

முன்னதாக ஏழு நிமிடங்கள் நீடிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தனது முடிவுக்கு மனைவியே காரணம். ஆண்களைப் பற்றி பேசுங்கள். அவர்களை பற்றியும் சிந்தியுங்கள். இந்தச் செய்தி காவல்துறை மற்றும் சட்ட அமைப்பிற்காக ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்!

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்!

கணவன் தற்கொலை

நிலைமை இப்படியே சென்றால், ஆண்களுக்கு எதிர்காலம் இருக்காது. தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். இதற்கிடையில் அவர் மனைவி நிகிதா சர்மா கூறுகையில்,

தனது கடந்த காலத்தை நியாயமற்ற முறையில் தனக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மானவை தற்கொலையிலிருந்து மூன்று முறை காப்பாற்றியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.