இரவு தனிமையில் இருக்கும் பெண்கள் தான் டார்கெட்.. பலரிடம் வேலையை காட்டிய டாக்சி டிரைவர் - அதிர்ச்சி!

Chennai Sexual harassment Crime
By Vinothini Nov 20, 2023 09:58 AM GMT
Report

டாக்சி டிரைவர் ஒருவர் தனிமையில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் சீண்டல்

சென்னை, டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் 42 வயது பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "எனது 13 வயது மகள் டியூசன் முடிந்து, நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு தனியாக நடந்து வந்தார்.

taxi-driver-harassed-many-women-during-night

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், எனது மகளை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மகளிடம் தவறாக நடந்துகொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

தொடர் சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்.. இப்போ என்ன நிலைமை? - மருத்துவர்கள் தகவல்!

தொடர் சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்.. இப்போ என்ன நிலைமை? - மருத்துவர்கள் தகவல்!

டாக்சி டிரைவர்

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா உள்பட 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் அதே டி.பி.சத்திரம், புஜ்ஜி தெருவை சேர்ந்த 24 வதுதான யோகேஸ்வரன் என்று தெரியவந்தது.

taxi-driver-harassed-many-women-during-night

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர் என்றும், தற்போது அதிலிருந்து வெளியேறி பைக் டாக்சி மற்றும் ஆன்லைன் உணவு விநியோகம் செய்து வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் இவர் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பின்னர், இவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.