நீங்கள் இந்தியர், ஒரு முட்டாள்.. இனவெறியால் பெண்ணை திட்டிய டாக்சி டிரைவர் - இணையத்தில் வைரல்!
டாக்சி டிரைவர் ஒருவர் பயணியை முட்டாள் என்று இனவெறியால் திட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிரைவர்
சிங்கப்பூரில், ஜனெல்லே ஹோடன் என்ற 46 வயது பெண், மதியம் 2 மணியளவில் தடா (TADA) பகுதியிலுள்ள ரைடு-ஹைலிங் பிளாட்ஃபார்மில் டாக்ஸி ஒன்றை முன்பதிவு செய்தார். பின்னர் அங்கு வந்த டாக்சியில் ஜனெல்லே தனது 9 வயது மகளுடன் ஏறினார். டாக்ஸி சென்றுகொண்டிருக்கும் போது, செல்லுமிடம் குறித்து அந்த பெண் தவறான தகவல் கூறியதால் டிரைவர் அவரைத் திட்டியுள்ளார்.
அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவதம் முற்றியது. அந்த பெண் தனது குழந்தையை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். அப்பொழுது அந்த டிரைவர், "நான் சீனாவைச் சேர்ந்தவன். நீங்கள் ஓர் இந்தியர், நீங்கள் முட்டாள்" என்று திட்டியுள்ளார். அதற்கு அந்த பெண், "நான் இந்தியர் அல்ல, சிங்கப்பூர் யூரேசியன்" என்று கூறியிருக்கிறார்.
பார்த்தாலே பதறுது.. 4 அடி நீளம், மனித குழந்தை போல் இருக்கும் மான்ஸ்டர் எலி - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
இணையத்தில் பரவல்
இந்நிலையில், இது குறித்து அந்த பெண், "நான் இந்தியராகவே இருந்தாலும், அவர் அவ்வாறு கூறியது தவறு. அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ, "Wake Up Singapore" என்ற ஊடக தளத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனையறிந்த தடா சிங்கப்பூர் நிர்வாகம், அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தடா செய்து தொடர்பாளர், "இன வேறுபாடுகளைத் தூண்டும் கருத்துகள் நேரடியாக தடா சமூக வழிகாட்டுதல்களை மீறுகின்றன. இந்த விவகாரத்தில் நாங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்.
அதனடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எத்தகைய சூழலிலும் இனவாதக் கருத்துகளை மன்னிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.