இதுவே முதல் முறை..வணிகர்கள் பயன்பெறும் சமாதான திட்டம்...பேரவையில் அறிவித்த முக ஸ்டாலின்

M K Stalin DMK Tamil Nadu Legislative Assembly
By Karthick Oct 10, 2023 07:26 AM GMT
Report

ரூபாய் 50 ஆயிரத்திற்கு கீழ் வரி செலுத்தும் வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறிமுகம் செய்த முக ஸ்டாலின்

இரண்டாவது நாளாக இன்று கூடிய தமிழக சட்டசபையில் 110-விதியின் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இந்த புதிய சமாதான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். வணிகத்துறையில் நிறைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் காரணத்தினால் பணிச்சுமை அதிகரிப்பது மட்டுமின்றி வணிகர்களும் அதிக சிரமத்திற்கு ஆள்கிறார்கள் என குறிப்பிட்டார்.

tax-free-for-businessman-stalin-announces-today 

இதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வருவாயும் வராமல் இருக்கின்றது. நிலுவையிலுள்ள வரிகளை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன்வைத்ததை சுட்டிக்காட்டிய அவர், அதற்காக புதிய வடிவில் புதிய சமாதான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதுவே முதல் முறை

வணிகத்துறை வணிகர்கள் இருதரப்பிற்கும் இடையே உள்ள பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரூபாய் 50 ஆயிரத்திற்கு கீழ் வரி கட்டி அபார தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் - நாளை விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் - நாளை விசாரணை!

வணிகர்களால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி அபராதம் நிலுவையில் உள்ளது என்றும் பழைய நிலுவைத் தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டு வருகிறோம் என்றும் வணிகர்கள் நிலவை தொகையை செலுத்துவதில் நான்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல் முறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.