வெளிநாடு செல்வோருக்கு வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!

Government Of India
By Sumathi Jul 29, 2024 11:26 AM GMT
Report

வெளிநாடு செல்வோருக்கு வருமான வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வரி அனுமதிச் சான்றிதழ் 

கடந்த 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு வருமான வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

வெளிநாடு செல்வோருக்கு வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்! | Tax Clearance Certificate Is Must For Abroad

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, வருமான வரி சட்டத்தின்படி ஒவ்வொரு நபரும் வரி அனுமதி சான்றிதழை பெறுவது கட்டாயம் இல்லை. கருப்பு பணம் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் வருமான வரி உள்ளிட்ட வரிப்பாக்கி உள்ளவர்கள்,

வருமான வரி கட்டுறீங்களா? இதோ முக்கிய தகவல் - மத்திய அரசு அறிவிப்பு!

வருமான வரி கட்டுறீங்களா? இதோ முக்கிய தகவல் - மத்திய அரசு அறிவிப்பு!

அரசு விளக்கம்

வருமான வரி சட்டத்தின் கீழ் விசாரணைக்கு இருப்பது அவசியம் என்பதால் அவர்கள் வெளிநாடு செல்லும் போது வரி அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயம். அவ்வாறு வரி அனுமதி சான்றிதழ் பெறுபவர்கள் தங்களுக்கு எந்த வரி பாக்கியம் இல்லை என்று வருமான வரித்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

வெளிநாடு செல்வோருக்கு வரி அனுமதிச் சான்றிதழ் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்! | Tax Clearance Certificate Is Must For Abroad

அதற்கு வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அல்லது வருமான வரித்துறையின் தலைமை ஆணையரின் அனுமதி பெற வேண்டும். சான்றிதழை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு வருமான வரி அல்லது செல்வ வரி உள்ளிட்டவற்றின் கீழ் எந்த நிலுவையும் இல்லை என்பதை குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.