வருமான வரியில் முக்கிய மாற்றங்கள் - அவசியம் இதை நோட் பண்ணுங்க..
வருமான வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வருமான வரி மாற்றம்
வருட வருமானம் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
இந்நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. புதிய வரி முறையில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகள் (Tax Slabs) மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை
ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை, மொத்த பிரீமியம் ரூ.5 லட்சத்தை மீறினால், அந்தத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்திற்கான ( leave encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
- ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும்,
- ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும்,
- ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும்,
- ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும்,
- ரூ. 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும்.