ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியம் - ஆளப்போகும் மாயா டாடா யார்?
ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சொத்தை ஆளப்போகும் வாரிசுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடா
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர்.
டாடா குழும தலைவராக 21 ஆண்டுகளாக இருந்து வந்த ரத்தன் டாடா, கடந்த 2012-ம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா குழுமத்தின் பொறுப்பை சைரஸ் மிஸ்திரி ஏற்றார். இவர் சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்தார்.
அடுத்த தலைவர்?
அதன் பிறகு தற்போது டாடா குழுமம் என் சந்திரசேகர் தலைமையில் உள்ளது. இந்நிலையில் இவரின் வாரிசுகளாக நோயல் டாடா, நெவில் டாடா, லியா டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் கருதப்படுகின்றனர். இதில் மாயா டாடா ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவின் மகள். டாடா குழுமத்தின் வாரிசுகளில் ஒருவர்.
இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் பேஸ் பிசினஸ் ஸ்கூலில் தனது கல்வியை முடித்த இவர் அடுத்து டாடா குழுமத்தின் தலைவராகலாம் என சில கூறப்படுகிறது. இவரது தாயார் அல்லு மிஸ்திரி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார்.
சைரஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட் குரூப் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பம் 18.4% பங்குகளை வைத்துள்ளது. அவருக்கு அதிக பங்கு இருப்பதால், அவர் எதிர்காலத்தில் டாடா குழுமத்தின் பொறுப்பை மாயா டாடா ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.