இந்தியாவை மேம்படுத்துவதில் அவரது அக்கறை.. ரத்தன் டாடா மறைவுக்கு சுந்தர் பிச்சை இரங்கல்!
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நல குறைவால் காலமானார்.
ரத்தன் டாடா
பிரபல பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) 1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
86 வயதான இவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்தார்.
தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரத்தன் டாடாவின் மறைவு செய்தியை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில் "கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார்.
இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.