பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் - கலங்கும் பிரபலங்கள்

TATA India Businessman Mumbai Ratan Tata
By Karthikraja Oct 09, 2024 06:58 PM GMT
Report

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமடைந்து விட்டார்.

ரத்தன் டாடா

பிரபல பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா(Ratan Tata) 1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

ratan tata death

86 வயதான இவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்தார்.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா? அவரே கொடுத்துள்ள விளக்கம்

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா? அவரே கொடுத்துள்ள விளக்கம்

உயிரிழப்பு

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ratan tata death

தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

ரத்தன் டாடாவின் மறைவு செய்தியை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.