ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா? அவரே கொடுத்துள்ள விளக்கம்
ரத்தன் டாடா ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐசியூவில் ரத்தன் டாடா?
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா(Ratan Tata) 1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
86 வயதான இவர் இன்று (07.10.2024) அதிகாலை 12;30 மணியளவில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தம் அழுத்தம் காரணமாக ஐசியூ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ரத்தன் டாடா விளக்கம்
தற்போது அதை மறுத்துள்ள ரத்தன் டாடா அது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது வயது மற்றும் உடல்நிலை தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து எவ்வித கவலைக்குரிய காரணமும் இல்லை.
Thank you for thinking of me 🤍 pic.twitter.com/MICi6zVH99
— Ratan N. Tata (@RNTata2000) October 7, 2024
நான் நல்ல மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னை குறித்து நினைத்ததற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.