3 நாட்களுக்கு சென்னையில் டாஸ்மாக் லீவ்..! உத்தரவிட்ட கலெக்டர் - ஷாக்கான மதுபிரியர்கள்..!
இந்த ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் சென்னையில் 3 நாட்களுக்கு மூடியிருக்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் மூடல்
சென்னையில் இந்த மாதம் (ஜனவரி)'யில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடியிருக்கும் என்ற அறிவிப்பை சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினமான 26-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மீறினால்...
இந்த மேல்குறிப்பிட்ட தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல், கிளப் உள்ளிட்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கலெக்டரின் இந்த உத்தரவின் பேரில் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மதுக்கடைகள் இயங்காது என்று மது கடை ஊழியர்களும் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.