மதுக் கடைகள் மூடல்; பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, இந்தக் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்காக, கோவில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கும், வெளிநாடுகளில் 7000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவில் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.