அயோத்தி ராமர் கோவில்; அதானி முதல் விராட் கோலி வரை.. விஐபிக்கள் மட்டுமே இவ்வளவு பேர்!
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில்
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இங்கு 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
பிரபலங்கள் அழைப்பு
இந்நிலையில், 2024 ஜனவரி மாதம் 14ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு முறைப்படி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு 8,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதில் விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர் என்று கூறப்பட்டுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், டிவி சீரியலில் ராமர், சீதை வேடத்தில் நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட உள்ளனர்.