தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - எப்போது தெரியுமா?
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.
மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் மூடல்
ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்போது 48 மணி நேரமும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்படும். இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலங்களில் டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் மது வகைகள் இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மதுபானங்களை மொத்தமாக விற்கக்கூடாது. ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் விற்கக்கூடாது. அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே மதுக்கடைகள் இயங்க வேண்டும். பார்களில் மதுபானம் இருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.