இனி MRP விலையில் டாஸ்மாக் மதுபானங்கள் : அமைச்சர் அதிரடி உத்தரவு

By Irumporai Jun 26, 2023 08:55 AM GMT
Report

அரசு மதுபானக் கடைகளில் MRP விலையில் மதுப்பானங்கள் விற்கப்பட வேண்டும் என அமைச்சர் முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

  மதுபான புகார்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் குறிப்பிட்ட அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இனி MRP விலையில் டாஸ்மாக் மதுபானங்கள் : அமைச்சர் அதிரடி உத்தரவு | Minister Muthuswamy Has Directed Tasmac Shops

 இனி MRP

இந்த புகாரை அடுத்து, தற்போது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உத்தரவு பிறப்பித்துள்ளளார். அதில், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தபட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு நிர்ணயம் செய்த அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விலையில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும், அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.