தமிழகம் முழுவதும் மது விற்பனை கிடையாது - எந்த தேதியில் தெரியுமா?
டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம்,
அரசு விடுமுறை
நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்படும். இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.