டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் விடுமுறை - ஏன், எப்போதெல்லாம் தெரியுமா?
நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் நடைபெறுகிறது. திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளளார். தொடர்ந்து 8ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை
இந்நிலையில், தேர்தலை ஒட்டி நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி, வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூலை 13-ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.