நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு - பகீர் விளக்கம் அளித்த பிரபல நடிகர்!

Tamil Cinema Actors Bollywood Tamil Actress Actress
By Jiyath Jun 24, 2024 09:30 AM GMT
Report

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டை நடிகர் நானா படேகர் மீண்டும் மறுத்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா

விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. மேலும், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு - பகீர் விளக்கம் அளித்த பிரபல நடிகர்! | Tanushree Duttas Sexual Harassment Allegation

முன்னதாக தத்தா ஒரு பேட்டியில், 'ஹார்ன் ஓகே பிளீஸ்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

கமல்ஹாசனை பாராட்ட மாட்டேன்.. இதுதான் காரணம் - ஓப்பனாக சொன்ன விஜய்!

கமல்ஹாசனை பாராட்ட மாட்டேன்.. இதுதான் காரணம் - ஓப்பனாக சொன்ன விஜய்!

அதெல்லாம் பொய்

இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் இந்த குற்றச்சாட்டை அவர் மீண்டும் மறுத்துள்ளார். நானா படேகர் கூறுகையில் "அதெல்லாம் பொய் என்று எனக்கு தெரியும். அதனால் கோபப்படவில்லை.

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு - பகீர் விளக்கம் அளித்த பிரபல நடிகர்! | Tanushree Duttas Sexual Harassment Allegation

எல்லாம் பொய்யாக இருக்கும்போது நான் ஏன் கோபப்பட வேண்டும்? அவை நடந்திருந்தால் பேசலாம். அப்படி எதுவும் நடக்காதபோது நான் என்ன சொல்ல முடியும்? அனைவருக்கும் உண்மை தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.