கமல்ஹாசனை பாராட்ட மாட்டேன்.. இதுதான் காரணம் - ஓப்பனாக சொன்ன விஜய்!
நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.
தசாவதாரம்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தசாவதாரம். இந்த படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் குவித்திருந்தது.
தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், கோலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஜய் "நாங்கள் ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது..
அதாவது ஒரு காவல் துறை அதிகாரியோ, வக்கீலோ, டாக்டரோ, ஒரு தாதா கதாபாத்திரமோ நடிக்கும்போது அந்த துறைகளில் சிறந்தவர்களிடம் சென்று அவர்களுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அதை திரையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.
வாத்தியாரை வாழ்த்தி..
ஆனால், கமல்ஹாசன் ஒரு காவல்துறை கதாபாத்திரம் நடித்தால் ஊரில் இருக்கக் கூடிய அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அந்த படத்தை பார்த்துவிட்டு, ஒரு காவல் துறை அதிகாரி கெத்தாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசனை பார்த்து கற்றுக்கொள்வார்கள் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார்.
கமல் சாரை நான் பாராட்ட வேண்டும். ஆனால், நான் பாராட்டப்போவதில்லை. ஏனெனில், என்னதான் புத்திசாலியான மாணவனாக இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்தி ஒன்றுமில்லை. அவருடைய கடமை எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பது. எங்களுடைய வேலை அதை ரசித்துக்கொண்டே கற்றுக்கொள்வது" என்று புகழ்ந்து பேசியிருந்தார்.