காதலிக்கு தெரிந்தே கொடூரம்; சுப்பிரமணியபுரம் பட பாணியில் கொலை - அதிரவைக்கும் சம்பவம்!
மகளை காதலித்தவரை கூலிப்படை வைத்து தந்தை கொலை செய்துள்ளார்.
காதம் விவகாரம்
தஞ்சை, திருமலைசமுத்திரம் தெற்குவீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல்(23). தனியார் பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். திடீரென இவரை காணவில்லை என அண்ணன் சரவணன் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ராராமுத்திரைக்கோட்டை பகுதியில் புது ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் மிதந்த உடல் சக்திவேல் தான் என்பது அவரது உறவினர்களால் உறுதி செய்யப்பட்டது.
கொடூர கொலை
தொடர்ந்து, சக்திவேலுக்கும், அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகள் தேவிகா (19) என்பவருக்கும் காதல் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், பாலகுரு விஏஓ வள்ளியிடம் சரண் அடைந்தார்.
மேலும், மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். மகளின் காதலில் விருப்பம் இல்லாததால் செய்துள்ளார்.
நிலத்தை விற்பனை செய்வது குறித்து பேச வேண்டும் என்று சக்திவேலுவை தென்னந்தோப்பிற்கு வரவழைத்து கூலிப்படையினர் 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
பின் உடலையும், அவர் வந்த பைக்கையும் குருவாடிப்பட்டி பகுதியில் புது ஆற்றில் வீசியுள்ளனர். சக்திவேலை கொலை செய்ய தனது தந்தை திட்டம் தீட்டியது தேவிகாவிற்கும் தெரிந்துள்ளது.
எனவே, தேவிகா, தந்தை, மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.