6 வருஷமா.. மகளை மிரட்டி சீரழித்த பெரியப்பா, அண்ணன் - கொடூர சம்பவம்!
பெரியப்பா மற்றும் அண்ணன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருப்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது தம்பி மகளை உதவிக்கு அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளார். தொடர்ந்து, 2-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
போக்சோவில் கைது
மேலும், 6 ஆண்டுகளாக கொடுமை செய்து வந்துள்ளார். பின் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். இதற்கிடையில், மாணவியின் அண்ணன் முறையான 30 வயது இளைஞரும் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சித்திரவதை தாங்காமல் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த தந்தை உடனே போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர்.