38 வயது பெண்ணை தூக்கிச்சென்று கைதி சிறையில் பாலியல் வன்கொடுமை - அதிகாரிகள் கொடூரம்!
பெண்ணை, அதிகாரிகள் கைதியின் சிறையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
இங்கிலாந்து, மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்னா இமான்(38). இந்தப் பெண்ணை கடந்த 2021ல் அந்நகர காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அவரை பிரிட்டிஷ் காவல் துறையினர் அழைத்து சென்று, போதைப்பொருளை கொடுத்து, கைதிகளின் அறைக்கு தூக்கி சென்று கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
அதனையடுத்து அந்தப் பெண் வீடியோ ஆதாரத்துடன் போலீஸாருக்கு எதிராக புகாரளித்துள்ளார். மேலும், 40 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.