கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை - அடிக்கடி அத்துமீறல், கடனால் கொடூரம்!
கணவன் முன் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா, ஹடப்சர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் ஹசீன். வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரால் கடனை திரும்ப தர இயலவில்லை.
எனவே ஹசீன் கடன் வாங்கிய நபரையும் அவரது மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து இருவரையும் மஹாடா காலனியில் இருக்கும் கட்டடத்துக்கு வரும்படி கூறியுள்ளார்.
கடன் தொல்லை
அங்கு கடனாளியின் மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து ஹசீன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி அடிக்கடி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனையடுத்து வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது வேகமாக பரவி நிலையில் அந்தப் பெண் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையுல் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஹசீன் மொபைலை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.