தஞ்சை பெரிய கோயில்; வெடித்த சர்ச்சை - அறநிலையத்துறை எச்சரிக்கை!
தஞ்சை பெரிய கோயில் அவதூறு குறித்து அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில்
உலகப் பிரசித்தி பெற்றது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே, இங்கு புதிய கட்டுமானங்களைச் செய்யவோ, பழைய கட்டுமானங்களை மராமத்து செய்யவோ தொல்லியல் துறையால் மட்டுமே முடியும்.
குடமுழுக்கு உள்ளிட்ட விவகாரங்களை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் பிரதான கோபுரத்துக்கு பின்புறம் தரைத்தளம் மேடு, பள்ளமாக இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
அறநிலையத்துறை அறிக்கை
அதனைத் தொடர்ந்து அதற்கான மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறை செய்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட சிலர், இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை பெரிய கோயிலை சிதைக்கும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலைத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.