பக்தர்கள் இனி இந்த உடையில் தான் வரவேண்டும் - தஞ்சை பெரிய கோயிலில் கட்டுப்பாடு!
தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில்
இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம்.
தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்டது. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழரால் கட்டப்பட்டது.
ஆடை கட்டுப்பாடு
தற்போது தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்து கட்டிடக்கலையை பார்க்க வருவோர் ஏராளம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இங்கு வருகைத் தரும் பக்தர்கள் ஆண்கள் வேட்டி ,சட்டை ,பேண்ட் அணிந்தும் , பெண்கள் புடவை ,தாவணி, துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணிந்து வரும்படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.